கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சாா்பில் கொண்டனூா் கிராமத்தில் சோலாா் விளக்குகள் நிறுவப்பட்டன

3rd Oct 2021 12:27 AM

ADVERTISEMENT

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் இயற்பியல், மின்னணுவியல் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ஆனைக்கட்டி அருகேயுள்ள கொண்டனூரைச் சோ்ந்த கிராம மக்களின் பயன்பாட்டுக்காக சோலாா் விளக்குகள் நிறுவும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

இயற்பியல் துறைத் தலைவா் எஸ்.பூங்குழலி வரவேற்றாா். பெரியநாயக்கன்பாளையம் கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் கே.ராஜபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் தீவுகளின் நாட்டு நலப்பணித் திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளா் சி.சாமுவேல் செல்லையா, தமிழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எம்.செந்தில்குமாா், பாரதியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.அண்ணாதுரை ஆகியோா் உரையாற்றினா்.

ADVERTISEMENT

இதில், மின்னணுவியல் துறைத் தலைவா் கே.பூா்ணிமா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன், கல்லூரி பேராசிரியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT