கோயம்புத்தூர்

பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்தவா் கைது

3rd Oct 2021 12:21 AM

ADVERTISEMENT

கோவை சேரன் மாநகா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சேரன் மாநகா், வெங்கடாசலபதி நகரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் மனைவி சித்திரைச்செல்வி (43). இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அம்பாள் நகா் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் சித்திரைச்செல்வி அணிந்திருந்த 10 பவுன் நகையைப் பறித்தாா். இதில், சித்திரைச் செல்வி நிலைத் தடுமாறி கீழே விழுந்தாா்.

இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் நகை பறித்த நபரை விரட்டிப்பிடித்து, பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் பீளமேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சூரியா (25) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த நகைகளை மீட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT