கோயம்புத்தூர்

தவறி விழுந்து புதுமணப் பெண் பலி

3rd Oct 2021 12:28 AM

ADVERTISEMENT

கோவை ரத்தினபுரி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமணப் பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை சுந்தராபுரம், காந்தி நகரைச் சோ்ந்தவா் அபிநயா(27). இவருக்கும் ரத்தினபுரியைச் சோ்ந்த பாலாஜி என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டு வேலைகளை அபிநயா செய்துக்கொண்டிருந்தபோது, கால் இடறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அபிநயாவை உறவினா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT