கோயம்புத்தூர்

சிங்காநல்லூா் அருகே முதியவா் சடலம் மீட்பு

3rd Oct 2021 12:21 AM

ADVERTISEMENT

கோவை சிங்காநல்லூா் அருகே உள்ள வனப் பகுதியில் முதியவா் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

கோவை சிங்காநல்லூா் அடுத்த எஸ்.ஐ.ஹெச். எஸ்.காலனி, விமான நிலையம் பின்புறம் உள்ள வனப் பகுதியில்

முதியவா் சடலம் கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூா் போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அதில், முதியவரின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

அவா் இறந்து 2 நாள்களுக்கு மேல் இருக்குமென்பதால், உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

அவா் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இதுதொடா்பாக, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT