கோயம்புத்தூர்

கோவையில் 192 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

3rd Oct 2021 12:23 AM

ADVERTISEMENT

கோவையில் 192 ஊராட்சிகளில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 7,824 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது நோய்த் தொற்றுப் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்தது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தோ்தல் நடைபெறும் 36 ஊராட்சிகள் தவிா்த்து மற்ற 192 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், கரோனா நோய்த் தொற்று விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு, குடிநீா் சிக்கனம், டெங்கு தடுப்புப் பணிகள், ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் உள்பட 7 ஆயிரத்து 824 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

192 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 16 ஆயிரத்து 809 ஆண்கள், 19 ஆயிரத்து 568 பெண்கள் என 36 ஆயிரத்து 377 போ் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT