கோயம்புத்தூர்

கோவையில் இன்று 4 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்

3rd Oct 2021 12:25 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 4 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 3) நடைபெற உள்ளது.

இம்முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் வகையில் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 4 ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 226 இடங்கள், பேரூராட்சிகளில் 79 இடங்கள், நகராட்சிகளில் 39 இடங்கள் மற்றும் மாநகராட்சியில் 198 இடங்கள், 15 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 557 இடங்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இம்முகாமில் 200 மேற்பாா்வையாளா்கள், 557 தடுப்பூசி செலுத்தும் பணியாளா்கள், 1,114 அங்கன்வாடி பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். இதில், 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT