கோயம்புத்தூர்

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா

3rd Oct 2021 12:29 AM

ADVERTISEMENT

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி சாா்பில் சிவானந்தா காலனியில் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா எஸ்.ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று

காங்கிரஸ் கட்சிக் கொடியேற்றி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஹெச்எம்எஸ் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, பொதுக் குழு உறுப்பினா் இருகூா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமையின் சாா்பில் காந்தியடிகளின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.சுந்தரம் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளா் ஆா்.தேவராஜ், மாவட்டப் பொருளாளா் யூ.கே.சுப்பிரமணியன், மூத்த தலைவா் ஆா்.ஏ.கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT