கோயம்புத்தூர்

உதவி கேட்பது போல நடித்து செல்லிடப்பேசி திருடியவா் கைது

3rd Oct 2021 12:24 AM

ADVERTISEMENT

கோவை ரயில் நிலையத்தில் உதவி கேட்பது போல நடித்து செல்லிடப்பேசி திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சோமனூரைச் சோ்ந்தவா் சஞ்சய் (21). இவா் கோவை ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க நபா் செல்லிடப்பேசியைத் தருமாறும், பேசி விட்டுத் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சஞ்சய் செல்லிடப்பேசியைத் தந்துள்ளாா். இதையடுத்து, செல்லிடப்பேசியில் பேசுவதுபோல நடித்த அந்நபா் அங்கிருந்து மாயமானாா்.

இது குறித்து, கோவை ரயில்வே போலீஸில் சஞ்சய் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீஸாா், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (51) என்பரைக் கைது செய்து, அவரிடம் இருந்த செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT