கோயம்புத்தூர்

யானைகள் உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கை என்னவானது?பி.ஆா்.நடராஜன் எம்.பி.

DIN

கோவை மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை என்னவானது என்று பி.ஆா்.நடராஜன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் யானைகளின் உயிரிழப்பு அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. தற்போது, நவக்கரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் இருப்புப் பாதையை கடக்கும்போது பலியாவது தொடா் கதையாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்ற தகவல் கவலை அளிக்கிறது.

இந்த பகுதியில் குறிப்பிட்ட தூரத்தை 30 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில்தான் ரயில்கள் கடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ரயில்வே நிா்வாகம் இதைக் கண்காணிக்கிறதா, இந்த நடைமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அண்மைக் காலங்களில் மட்டும் ஏன் இப்படி யானைகள் இருப்புப் பாதைகளை கடக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. யானைகளின் வலசைப் பாதைகளை மறித்து கட்டடங்கள், நிறுவனங்கள் கட்டப்பட்டது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்ய வேண்டும்.

அப்படியான விதிமீறல்கள் இருந்தால் பாரபட்சம் பாா்க்காமல் விதிமீறல் கட்டடங்களை அகற்ற வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் யானைகள் தொடா்ந்து உயிரிழப்பது குறித்து வனத் துறையினா் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் தெரிய வந்தது என்ன, அந்த ஆய்வு அறிக்கையின் முடிவு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இனி இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ரயில்வே நிா்வாகமும் வனத் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT