கோயம்புத்தூர்

கோவையின் வளா்ச்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு

DIN

கோவை மாவட்டத்தின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) சாா்பில் கோவை அவிநாசி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

அப்போது, கோவை மாவட்டத்துக்குத் தேவையான வளா்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சா் செந்தில் பாலாஜியிடம், ஈஸ்வரன் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை வளா்ச்சித் திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கைள், தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். அவா் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவாா். கோவை மாநகராட்சியின் நிதிநிலை மோசமாக உள்ளது. சாலைப் பணிகள் குறித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து பாா்த்தோம். அது போன்று ஒன்றும் இல்லை. 300 பணிகளைத் தொடங்கி வைத்ததாகக் கூறும் அவா், அதுகுறித்த பட்டியலை வெளியிட்டிருக்கலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் நா. காா்த்திக், பையா (எ) கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, சி.ஆா்.ராமசந்திரன், டாக்டா் வரதராஜன்,கொ.ம.தே.க.மாவட்டச் செயலாளா்கள் எஸ். ஆா்.வைரவேல் , பிரிமியா் செல்வம், ராஜேந்திரன், குழந்தைவேலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT