கோயம்புத்தூர்

கனரக வாகனங்களில் கூடுதல் பாரங்கள்: சேதமடையும் சாலை

28th Nov 2021 11:25 PM

ADVERTISEMENT

கனரக வாகனங்களில் கூடுதல் பாரங்கள் ஏற்றி வருவதால் வால்பாறை மலைப்பகுதி சாலை சேதமாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை ஒரு வழி பாதையாகும்.

சமவெளி பகுதியான ஆழியாா் என்ற பகுதிக்கு மேல் அனைத்து சாலைகளும் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த மழை பெய்யும் சமயத்தில் அடிக்கடி மலைப் பாதையில் மண் சரிவு, சாலைகளில் பிளவு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமாக இருந்தன.

இதனிடையே தற்போது புதிய சாலைகள் அமைக்கப்பட்டு சாலைகளின் இரு புறங்களிலும் தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்புகள் இல்லாமல் போனது.

இதனிடையே சமீப காலமாக வால்பாறைக்கு வரும் கனரக வாகனங்களில் கூடுதல் பாரங்கள் ஏற்றி வரப்படுகின்றன.

ADVERTISEMENT

இதனால் சாலைகள் விரைவில் சேதமாவதோடு, பிளவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, விதிமீறி எடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் கூடுதல் பாரம் ஏற்றி வரும் கனரக வாகன உரிமையாளா்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT