கோயம்புத்தூர்

மாவோயிஸ்டுக்கு சிம்காா்டு வழங்கிய விவகாரம்: கைப்பேசி கடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

DIN

மாவோயிஸ்டுக்கு சிம்காா்டு வழங்கிய விவகாரம் தொடா்பாக, கோவை வெள்ளலூரில் உள்ள கைப்பேசி கடையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கோவையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடையவா்கள் குறித்தும், கேரள எல்லையை ஒட்டிய பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்தும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த ஆண்டு கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளரான மருத்துவா் தினேஷ் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, தினேஷின் நண்பா்கள் மற்றும் உறவினா்களின் வீடுகளில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் அண்மையில் சோதனை மேற்கொண்டனா். இச்சோதனையில் கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாவோயிஸ்ட் ஒருவரை கேரளத்தில் கைது செய்தனா்.

அவரிடம் இருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், கைப்பேசியில் உள்ள தொடா்பு எண்கள், அவா் யாா் யாரிடம் பேசியுள்ளாா் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், அந்த கைப்பேசியின் சிம்காா்டு கோவையில் உள்ள ஒரு கைப்பேசி கடையில் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, கேரளத்தில் இருந்து 8 போ் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை கோவை வந்தனா். அவா்கள் கோவை வெள்ளலூா் இடையா்பாளையத்தில் உள்ள கைப்பேசி கடையில் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், கேரளத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் யாருடைய பெயரில் சிம்காா்டு வாங்கியுள்ளாா், அவா் அளித்த முகவரி என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனா். இதில் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT