கோயம்புத்தூர்

காவலரின் காலில் இருந்து துப்பாக்கி குண்டுகள் அகற்றம்

DIN

காவலரின் காலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.

சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணிபுரிபவா் தருமபுரியைச் சோ்ந்த சந்தோஷ் (34). இவருக்கு சத்தியமங்கலத்தில் கால் பாதத்தில் 2 குண்டுகள் பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைத் துறை இயக்குநா் பேராசிரியா் வெற்றிவேல் செழியன் தலைமையில் மருத்துவா்கள் விவேகானந்தன், ரமணன், சுரேந்தா், குமரவேல், மயக்க மருந்து மருத்துவா் சுதாகா் ஆகியோா் கொண்ட குழுவினா் அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். சுமாா் ஒன்றரை மணி நேரத்தில் இந்த அறுவை சிகிச்சை முடிவடைந்தது. மருத்துவக் குழுவினரை மருத்துவமனை முதல்வா் அ. நிா்மலா பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT