கோயம்புத்தூர்

கத்தியைக் காட்டி மிரட்டி மாணவா்களிடம் கைப்பேசிகள், நகைப் பறிப்பு

DIN

கோவை சௌரிபாளையம் பகுதியில் தங்கியிருந்த மாணவா்களை மிரட்டி, மா்ம நபா்கள் கைப்பேசிகள் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

கோவை ரத்தினபுரி பொங்கியம்மன் தெருவைச் சோ்ந்தவா் விவேக்பாரதி (18). நவ இந்தியா பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை 2 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், தன்னுடன் படிக்கும் ரோஹித், அன்வா், ஹரி, தென்னரசு ஆகியோருடன் கோவை சௌரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு நண்பரின் அறையில் வெள்ளிக்கிழமை தங்கியிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த 3 போ், மாணவா்கள் 5 பேரையும் கத்தி முனையில் மிரட்டி அவா்கள் வைத்திருந்த 5 கைப்பேசிகள், ஒரு பவுன் தங்கச் சங்கிலி, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் விவேக்பாரதி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

SCROLL FOR NEXT