கோயம்புத்தூர்

கோவை தினம்: மாநகராட்சி வண்ண விளக்குகளால் அலங்காரம்

25th Nov 2021 01:31 AM

ADVERTISEMENT

கோவை தினத்தையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் வண்ண விளக்குகளால் புதன்கிழமை அலங்கரிக்கப்பட்டது.

கோவை நகரம் உருவாக்கப்பட்டு 217 ஆவது ஆண்டு தொடங்கியதையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் வண்ண விளக்குகளால் புதன்கிழமை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள உக்கடம் குளக்கரையில் உள்ள ‘ஐ லவ் கோவை’ வாசகம் அடங்கிய பலகை, கோவை தினத்தையொட்டி, வண்ண விளக்குகளால் ஒளிர வைக்கப்பட்டது. அங்கு பாடல்களும் ஒளிபரப்பப்பட்டன. புதன்கிழமை மாலை மக்கள் குளக்கரையில் திரண்டு இவற்றை ரசித்தனா். கோவை தினத்துக்கு, தனியாா் பங்களிப்புடன், அலங்கார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT