கோயம்புத்தூர்

ஆட்டைக் கொல்ல வந்த சிறுத்தையை விரட்டிய பள்ளி மாணவா்கள்

25th Nov 2021 01:35 AM

ADVERTISEMENT

பள்ளி வளாகத்துக்குள் இருந்த ஆட்டை பிடிக்க வந்த சிறுத்தையை மாணவா்கள் சப்தம்போட்டு விரட்டினா்.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கான கட்டடங்கள் அமைந்துள்ள பகுதியை ஒட்டி செடிகள் அதிக அளவில் வளா்ந்து காணப்படுகிறது. புதா்போல காட்சியளிக்கும் அந்தப் பகுதியில் அவ்வப்போது சிறுத்தை வந்து செல்வதாகப் பலா் பாா்த்து பள்ளி ஆசிரியா்களிடம் கூறியுள்ளனா்.

இந்நிலையில் பள்ளியில் புதன்கிழமை மதியம் 2.30 மணி இடைவேளையின்போது மாணவா்கள் வகுப்பறைக்கு வெளியே வந்துள்ளனா். அப்போது வளாகத்தில் மேய்ந்துக்கொண்டிருந்த ஆடு ஒன்றை சிறுத்தை கவ்வியுள்ளது. இதைப் பாா்த்து மாணவா்கள் எழுப்பிய சப்தத்தில் சிறுத்தை கவ்விய ஆட்டை விட்டுவிட்டு ஓடியது.

பள்ளி தலைமை ஆசிரியா் சிவன்ராஜ் கொடுத்த தகவலையடுத்து, வனத் துறையினா் அங்கு சென்று புதரில் பதுங்கியுள்ள சிறுத்தையை விரட்டும் பணியை மேற்கொண்டனா். பள்ளி வளாகத்தில் செடிகளை வெட்டி தூய்மையாக வைக்காத காரணத்தினால் சிறுத்தை வந்து செல்வதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT