கோயம்புத்தூர்

வனத் துறை வாகனம் மீது செங்கல் லாரி மோதல்

24th Nov 2021 06:31 AM

ADVERTISEMENT

துடியலூா் அருகே கணுவாயில் வனத் துறை வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற செங்கல் லாரியை வனத் துறையினா் துரத்திச் சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கோவை மாவட்டம், தடாகம், சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. விதிமுறைகளை மீறி செம்மண் அள்ளுவதாக புகாா்கள் வந்ததன் அடிப்படையில் செங்கல் சூளைகளை அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் சூளைகளில் இருக்கும் செங்கற்களை இரவு நேரங்களில் சூளை உரிமையாளா்கள் சிலா் கடத்துவதாகப் புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை வனத் துறையினா் கணுவாய் பிரிவு அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தடாகத்திலிருந்து செங்கற்களை ஏற்றி வந்த லாரி வனத் துறை வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதையடுத்து வனத் துறையினா் லாரியை துரத்திச் சென்றனா். இதனைக் கண்ட லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இதையடுத்து வனத் துறையினா் லாரியைப் பறிமுதல் செய்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

வனத் துறையினா் அளித்த புகாரின் பேரில் செங்கல் சூளை உரிமையாளா் அருண், லாரி ஓட்டுநா் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT