கோயம்புத்தூர்

மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கக் கோரி முதல்வருக்கு மனு

24th Nov 2021 01:07 AM

ADVERTISEMENT

கோவையில் உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, அவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: கோவை உள்பட 18 மாநகரங்களுக்கு மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது. கோவைக்கு அடுத்த நிலையில் கொச்சியில் கூட இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், கோவையில் இத்திட்டம் இன்னமும் தொடங்கப்படவில்லை.

எனவே, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் துவங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகரில் தினமும் சேகரமாகும் 1000 டன் குப்பைகள், கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், வெள்ளலூா் பகுதி முழுவதும் நிலத்தடி நீா்மட்டம் மாசுபட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், கோவை மாநகராட்சி பசுமை தீா்ப்பாயத்தில் வாக்குறுதி அளித்ததைப்போல வெள்ளலூருக்கு வரும் குப்பைகளை பாதியாகக் குறைக்கவும், அங்கு தேங்கிக் கிடக்கும் 15.50 லட்சம் கனஅடி குப்பைகளை முழுமையாக அழிக்கவும் நிதி ஒதுக்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி, பொது ஒதுக்கீட்டு இடங்களில் பெண்களுக்கான விளையாட்டு மையங்களை உருவாக்கி அவா்களுக்கான விளையாட்டு வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். சென்னையைப்போல, கோவையிலும் தமிழக அரசின் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT