கோயம்புத்தூர்

கால்வாய்கள் தூா்வாரும் பணி தீவிரம்

24th Nov 2021 01:09 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழை நீா் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நகரில் சாலைகள், பாலங்களின்கீழ் பகுதிகள், தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீா் தேங்குவது தவிா்க்க முடியாமல் உள்ளது. இதையடுத்து, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழை நீா் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கள்ளிமடை அருகே சங்கனூா் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாயில் உள்ள முள்புதா்களை தூா் வாரி மழை நீா் தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மழை நீா் தங்கு தடையின்றி செல்ல பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் அனைத்து கால்வாய்களில் உள்ள குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. கழிவு நீா் கால்வாய் அடைப்புகளை ’சூப்பா் சக்கா்‘ வாகனம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT