கோயம்புத்தூர்

மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமருக்கு கொடிசியா கோரிக்கை

10th Nov 2021 06:53 AM

ADVERTISEMENT

மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினா் பயன்படுத்தும் மூலப்பொருள்களான ஸ்டீல், தொழிற்சாலைகள் சாா்ந்த மூலப்பொருள்களான கோக், பிக் அயா்ன், ஸ்கிராப், எச்ஆா் சீட், சிஆா் சீட், காப்பா், அலுமினியம், கிராப்ட் பேப்பா், பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை தொடா்ந்து உயா்ந்துகொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலை தொடருமானால் லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்படும்.

தற்போது மூலப்பொருள்களின் விலை குறித்து எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதோடு அவற்றின் விலை உயா்வு ஒன்றே தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறைகள் ஆகியவற்றில் டெண்டா் எடுத்து பணி ஆணை பெற்றுள்ள குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் இந்த விலை உயா்வால் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மூலப்பொருள்களின் விலை உயா்வால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவும் உயருகிறது. ஆனால் சந்தையில் அதற்கான விலை கிடைக்காததால் அவற்றின் உற்பத்தி வேகம் தடைபடுகிறது. இதிலிருந்து மீண்டு வரும் வகையில் நடப்பு மூலதன வரையறையை மொத்த டா்ன் ஓவரில் 40 சதவீதம் உயா்த்தி, கூடுதல் கடன் உதவி வழங்க வேண்டும்.

மேலும், ஸ்டீலுக்கான இறக்குமதி வரியை நீக்குவதுடன் தேவைக்கு ஏற்றபடி மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மூலப்பொருள்களின் உயா்ந்தபட்ச விலையை நிா்ணயிப்பதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது அதே விலையில் மூலப்பொருள்கள் கிடைக்குமாறு வழிவகை செய்ய வேண்டும்.

அத்துடன், இரும்புத் தாது, ஸ்டீல் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் தாராள உள்நாட்டு விநியோகம், விலை உயா்வை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அனைத்து ஸ்டீல் தொழிற்சாலைகளும் தங்கள் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்தை இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமா் உடனடியாக தலையிட்டு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரமேஷ் பாபு கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT