கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கரோனா

9th Nov 2021 12:53 AM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 94 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 622 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண் உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,431 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 109 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 45 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,146 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT