கோயம்புத்தூர்

சேறும், சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸாா்

9th Nov 2021 01:01 AM

ADVERTISEMENT

கோவை: கோவையில் சேறும் சகதியுமாக இருந்த சாலையைச் சீரமைத்த போக்குவரத்து போலீஸாரின் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து கோவையில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதபுரம், லங்கா காா்னா், ஆத்துப்பாலம், காந்திபுரம், ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

குறிப்பாக மேம்பாலப் பணிகள் நடைபெறும் உக்கடம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் சாலைகள் சேறும்சகதியுமாக இருப்பதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு உள்ளது. பொள்ளாச்சி, பாலக்காடு செல்வோா் அதிக அளவில் பயன்படுத்தும் சாலை என்பதால் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தி சாலையை சீரமைக்க முடியாத நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில் ஆத்துப்பாலம் பகுதியில் மிகவும் சேதமடைந்திருந்த சாலைப் பகுதியை அப்பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸாா் சீரமைத்தனா். போலீஸாரின் இந்தச் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT