கோயம்புத்தூர்

சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு

9th Nov 2021 12:56 AM

ADVERTISEMENT

கோவை: கோவை, சிங்காநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கோவை தெற்கு கோட்டாட்சியா், மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சிங்காநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்

100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல்வேறு குடியிருப்புகள் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளன. தற்போது கோவையில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

இந்நிலையில், கோவை தெற்கு கோட்டாட்சியா் இளங்கோ, வருவாய்த் துறை அதிகாரிகள் சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது சிதிலமடைந்து இடியும் நிலையிலுள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினா். மேலும் வடகிழக்குப் பருவ மழைக் காலம் முடியும் வரை சிதிலமடைந்த வீடுகளை விட்டு பாதுகாப்பான குடியிருப்புகளில் வசிக்க பொது மக்களுக்கு வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT