வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொழிலாளி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்ததையடுத்து கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் பருவ மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட்டை சோ்ந்த தொழிலாளி மகாதேவன் (49). இவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினாா். இவா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து சுகாதாரத் துறையினா் சோலையாறு எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.