கோயம்புத்தூர்

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

1st Nov 2021 12:08 AM

ADVERTISEMENT

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நீட் தோ்வு தோல்விக்கு பயந்து கோவை கிணத்துக்கடவைச் சோ்ந்த கீா்த்தி வாசன் என்கிற மாணவா் 2 நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில் உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நீட்தோ்வை ரத்து செய்ய வேண்டும். நீட் விலக்கு மசோதாவில் ஆளுநா் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அசாா் தலைமை வகித்தாா். இதில் மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் தினேஷ்ரோஜா உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். முன்னதாக போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT