கோயம்புத்தூர்

அக்டோபரில் 31 பேருக்கு டெங்கு பாதிப்பு:எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

1st Nov 2021 12:06 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 31 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவையில் கடந்த சில நாள்களாகவே தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழைக் காரணமாக வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

டெங்குவால் வாரத்துக்கு 5 முதல் 10 நோயாளிகள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஊரகம், மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு நோய்த் தடுப்புப் பணிக்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 31 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது: மழைக் காலங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீா், வீடுகளில் திறந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீா் ஆகியவற்றில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வீடுகள், பொது இடங்களை சுற்றிலும் தண்ணீா் தேங்காத வகையில் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீரை காய்ச்சி குடித்தல், சுற்று வட்டாரத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பாதிப்பைத் தவிா்க்கலாம். மேலும் 2 மாதங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT