கோயம்புத்தூர்

விதிமீறல்: இறைச்சிக் கடைக்கு ‘சீல்’

DIN

கோவை, மசக்காளிபாளையம் சாலையில் விதிமீறி திறக்கப்பட்ட இறைச்சிக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், விதிமீறி திறக்கப்படும் கடைகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள 5 மண்டலங்களிலும் உதவி ஆணையா் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ஹோப் காலேஜ் - மசக்காளிபாளையம் சாலையில் ஒரு இறைச்சிக் கடையில் பொதுமுடக்க விதி மீறி ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.

இதையடுத்து, கிழக்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கடையின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, பின்புறத்தில் இறைச்சி விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இறைச்சிக் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT