கோயம்புத்தூர்

தடையை மீறி மது விற்பனை:24 போ் மீது வழக்குப் பதிவு

DIN

கோவையில் தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக 24 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பேரூா், கிணத்துக்கடவு, துடியலூா், செல்வபுரம், சிறுமுகை, சூலூா், மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 23 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 445 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல மாநகர பகுதியான வேலாண்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக ஒருவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT