கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் மேலும் 3,166 பேருக்கு கரோனா

DIN

கோவையில் மேலும் 3 ஆயிரத்து 166 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யபட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 532ஆக அதிகரித்துள்ளது.

15 போ் பலி...

கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள், 3 ஆண்கள், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள், 7 ஆண்கள் என 15 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 872ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,151 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 92 ஆயிரத்து 479 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 22 ஆயிரத்து 181 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT