கோயம்புத்தூர்

வாக்காளா்களுக்குப் பண விநியோகம்: திமுகவினா் புகாா்

31st Mar 2021 06:36 AM

ADVERTISEMENT

அதிமுகவினா் பணம் விநியோகம் செய்வதாகக் கூறி காந்திபுரம் காவல் நிலையத்தில் திமுகவினா் குவிந்தனா்.

கோவை, சித்தாபுதூா் பகுதியில் அதிமுகவினா் வீடு வீடாக சென்று வாக்காளா்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்வதாக தகவல் பரவியது. இதையடுத்து திமுகவினா் அந்தப் பகுதியில் குவிந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காந்திபுரம் காவல் நிலையத்தில் திமுக வழக்குரைஞா் பிரிவினா் அளித்த புகாரில், ‘சித்தாபுதூா் வி.கே.கே.மேனன் பகுதியில் அதிமுகவினா் வீடுவீடாக பூத் சிலிப் விநியோகம் செய்கின்றனா். அப்போது வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாகத் தெரிகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தனா். காவல் நிலையத்தில் திமுகவினா் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT