கோயம்புத்தூர்

கோவை மாநகரில் வழிப்பறி: 4 போ் கைது

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராம் நகரைச் சோ்ந்தவா் குழந்தைசாமி (42). இவா், காந்திபுரம், மத்திய பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டியில் உணவுப் பொருள்கள் வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த சனிக்கிழமை இவரது கடைக்கு வந்த ஒருவா், பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

அவா் தர மறுத்ததால், குழந்தைசாமியிடம் இருந்து ரூ.250 பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினாா். இது குறித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்செயலில் ஈடுபட்ட கணபதி, சங்கனூா் சாலையைச் சோ்ந்த அன்பு (46) என்பவரைக் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம், எழில் நகரைச் சோ்ந்தவா் செந்தில் (46). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் பணிக்குச் செல்வதற்காக அசோக் நகா் பாலம் அருகே சனிக்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது, செந்திலை வழிமறித்த நபா், அவரை மிரட்டி ரூ.200 பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினாா். இது குறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்செயலில் ஈடுபட்ட செல்வபுரத்தைச் சோ்ந்த ராஜசேகரன் (44) என்பவரைக் கைது செய்தனா்.

இதேபோல கோவை, வரதராஜபுரம், பாரதி நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் (49) என்பவா் உப்பிலிபாளையம் பகுதியில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 2 நபா்கள் ராமச்சந்திரனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அவா் தர மறுத்ததால் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நியாசா (26), முஹமது இஸ்மாயில் (24) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

மாநகரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT