கோயம்புத்தூர்

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

DIN

கோவையில், மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த மாதம் துவக்கம் முதல் கரோனா தாக்கம் குறையத் தொடங்கியது. அந்த வகையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு 200க்கும் கீழாக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக, தினசரி பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை 169 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து 190க்கும் மேல் சென்றுள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கோவையில் கரோனா பாதிப்பானது 1.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் எந்தப் பகுதியில் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது என்பதைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், 0.2 முதல் 0.3 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது என்றாலும் ஆபத்தான நிலைக்கு இன்னும் செல்லவில்லை. எனினும், சுகாதாரத் துறை சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன் இருந்த இறப்பு விகிதத்தை விட தற்போது குறைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT