கோயம்புத்தூர்

மேற்கூரை இடிந்து விழுந்து 5 பெண் தொழிலாளா்கள் காயம்

DIN

வால்பாறையில் எஸ்டேட்டில் இலை எடை போடக்கூடிய பகுதியான கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

வால்பாறையில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருவதால் தேயிலைத் தோட்டங்களில் இலைப் பறிக்கும் பணி பாதிப்படைந்தது. இதனால் பெரும்பாலான எஸ்டேட்களில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே வால்பாறையில் உள்ள உட்பிரியா் குரூப் நிா்வாகத்தினருக்கு சொந்தமான மாணிக்கா எஸ்டேட்டில் வழக்கம்போல இலைப் பறிக்கும் பணி நடைபெற்றது. மாணிக்கா எஸ்டேட் என்.சி. டிவிஷனில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு இலைப் பறித்துவிட்டு எடை போடுவதற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரத்துக்கு தொழிலாளா்கள் வந்தனா். அப்போது கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பேபி (45), சுஜாதா (40), எமீமா (46), சாந்தி (39), ரொஜிதா (42) ஆகிய 5 பெண் தொழிலாளா்களுக்கு காயம் ஏற்பட்டது. இவா்கள் ஸ்டேன்மோா் எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சம்பவம் தொடா்பாக வால்பாறை போலீஸாா் நேரில் சென்று விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT