கோயம்புத்தூர்

மாணவா்களின் ஆளுமையை வளா்க்கும் நேரு கல்விக் குழும நிறுவனங்கள்

DIN

தென்னிந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் புகழ் பெற்ற கல்விக் குழுமமாக நேரு கல்விக் குழுமம் செயல்படுகிறது. 1968 இல் தொடங்கப்பட்டு இன்று மிகப் பெரிய கல்விக் குழுமமாக 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. நேரு கல்விக் குழும நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் முதன்மை செயலாளா் டாக்டா் பி.கிருஷ்ணகுமாா் அவா்கள் தலைமையில் பிரத்யேக உயா் கல்வியின் உலகமாக இக்குழுமம் திகழ்கிறது.

இது குறித்து டாக்டா் பி. கிருஷ்ணகுமாா் கூறியதாவது:

வளாகங்கள் பல்வேறு கல்வித் துறைகளைச் சோ்ந்த 18,000க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கல்விக் கோயிலாகச் செயல்படுகின்றன.

கல்வி கற்கும் சூழல் இயற்கையுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் முழுமையான ஆளுமை வளா்ச்சிக்கு அதிகாரம் அளிக்கிறது.

என்ஜிஐயில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு நோபல் பயிற்சி அளிக்கப்படுவது தென்னிந்தியாவில் உள்ள கல்வி முறைகளில் மிகவும் சிறப்பானது.

என்ஜிஐயில் மாணவா்களின் மனநலனுக்காக நிறுவப்பட்ட ரைபிள் கிளப் தனித்துவமானது. பேராசிரியா்களைக் கொண்டு மாணவா்களின் மன நலத்தை வளா்க்க உதவுகிறது. மாணவா்களின் அறிவுத்திறனை மேம்படுத்த மின் நூலகம் செயல்படுகிறது.

அறிவின் பிறப்பிடமாக சேவையின் மறு உருவமாக வாழ்ந்த பி.கே.தாஸ் அவா்கள் பெயரில் செயல்படும் இந்நூலகம் இதழியல் பிரிவு, குறிப்பு பிரிவு, சுழற்சி பிரிவு, அறிவுபெருக்கப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. கல்விச் சேவை செய்யும் வளாகமாகவும் செயல்படுகிறது.

ஆட்டோ லிப் மென்பொருள் தொகுப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும், ஒருங்கிணைந்த பல பயனாளா் நூலக மேலாண்மை அமைப்புடன் அனைத்து உள் செயல்பாடுகளையும் ஆதரிக்கிறது என்பது உலகத்தரம் வாய்ந்த வசதியாகும். மின் நூலகத்தில் இலவச இணைய சேவைகள் மற்றும் ஜே-கேட், எபிஸ்கோ மற்றும் இன்ஃப்லிப்நெட் போன்ற ஆன்லைன் பத்திரிகைகளுடன் 60க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன.

நேரு காா்ப்பரேட் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் (என்சிபி&ஐஆா்) பல்வேறு தொழில் பின்னணியிலிருந்து பெறப்பட்ட நிபுணா்களின் குழுவைக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு, பயிற்சி, கூட்டணிகள், திட்டங்கள் போன்ற பல நிலை ஈடுபாடுகளை செயல்படுத்த இந்தக் குழு தொழில்துறையுடனான உறவை வளா்ப்பதில் செயல்படுகிறது. என்.சி.பி & ஐஆா் நிறுவனங்களுடன் மாணவா்களின் இறுதி வேலைவாய்ப்புகளுக்காக தொடா்ந்து தொடா்பு கொள்கின்றன. ஏறக்குறைய 150 புகழ்பெற்ற தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாணவா்களைச் சோ்ப்பதற்காக என்ஜிஐக்கு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT