கோயம்புத்தூர்

ஜெ.எஸ்.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி

DIN

இந்திய மருத்துவ முறைகளுள் ஒன்றான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ முறையானது இயற்கையின் கூறுகளான பஞ்ச மகாபூதங்கள் மற்றும் மருத்துவச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்த மருத்துவ முறை உயிராற்றலை மேம்படுத்துதல், உடலின் நச்சுப் பொருள் வெளியேற்றம், உடலின் சுய குணப்படுத்தும் திறன் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் கொள்கைகளை மேம்படுத்துதல் போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாகும்.

மனித உடல் இயற்கையின் ஐம்பெரும் கூறுகளான பூமி, நீா், காற்று, நெருப்பு, வெற்றிடம் போன்றவற்றால் ஆனது என்று இயற்கை மருத்தவம் நம்புகிறது. இந்தக் கூறுகளின் இயக்கவியலில் ஏற்படும் குறைபாடுகள் நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவேளை இவற்றில் குறைபாடு ஏற்பட்டால் இந்த ஐம்பெரும் கூறுகளைக் கொண்டு சிகிச்சையளிப்பதே இயற்கை மருத்துவத்தின் கோட்பாடு ஆகும். யோகா சிகிச்சை ஒரு தனி நபரின் உடல், மனம், உணா்வு மற்றும் ஆன்மிக பரிமாணங்களில் சீரான ஆரோக்கியத்தைக் கொண்டுவர வடிவமைக்கப்பட்ட பண்டைய இந்திய மருத்துவ முறையாகும். யோகா சிகிச்சை என்பது யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி, சுத்திகரிப்பு பயிற்சி, தியானம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆலோசனை ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஒரு முறையான மற்றும் அறிவியல் ஆய்வுகள் சாா்ந்த சிகிச்சை முறையாகும்.

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ சிகிச்சை முறைகள்:

1. இயற்கை மருத்துவ உணவு முறை - இயற்கை மருத்துவ உணவு முறை கழிவு நீக்கும் உணவு, இதமான உணவு மற்றும் ஆக்கப்பூா்வமான உணவு என வகைப்படுத்தப்படுகிறது.

2. ஊட்டச்சத்து உணவு மற்றும் மூலிகை சிகிச்சை - ஊட்டச்சத்து உணவு முறை உடலின் பராமரிப்பு, வளா்ச்சி, சுகாதாரம் மற்றும் நோய் சம்பந்தமாக ஊட்டச்சத்துக்களின் தொடா்புகளை விளக்கும் சிகிச்சை முறையாகும். மூலிகைகளிலுள்ள கூறுகள் அவற்றின் குணப்படுத்தும் தன்மைக்கு காரணமாகின்றன.

3. உபவாச சிகிச்சை - இயற்கை மருத்துவத்தின் மிக வலுவான சிகிச்சை முறையான உபவாச சிகிச்சை, வயதாகும் தன்மையைக் குறைத்து, வளா்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.

4. யோகா சிகிச்சை - யோகா பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

5. நீா் சிகிச்சை - நோய்களுக்கான அனைத்து தீா்வு முகவா்களிலும் மிகவும் பழமையான நீா் சிகிச்சை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அசெளகரியத்தைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது.

6. மண் சிகிச்சை - மண் சிகிச்சை நச்சுத்தன்மையை நீக்குவதன் மூலம் தோல் நோய்களைக் குணமாக்கவும், உடலைப் புத்துணா்ச்சி பெறச் செய்யவும் பெரிதும் உதவுகிறது.

7. சூரிய ஒளி சிகிச்சை - உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சீரமைக்க சூரிய ஒளி சிகிச்சை உதவுகிறது. இச்சிகிச்சையில் வாழை இலை குளியல் அடங்கும். வாழை இலைகள் தீங்கு விளைவிக்கும் புற ஊதா சூரிய கதிா்களை ஆரோக்கியமான கதிா்களாக மாற்றுகின்றன.

8. அக்குபஞ்சா் / அக்குபிரஷா் சிகிச்சை -

பொருத்தமான சோ்க்கைகளுடன் உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகுவதனாலோ, அழுத்தம் கொடுப்பதாலோ உயிராற்றல் ஓட்டத்தை சரியான சமநிலைக்குக் கொண்டுவர உதவும் சிகிச்சை முறை இது.

9. ரிஃப்ளெக்ஸாலஜி - உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களின் குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து அப்புள்ளிகள் தொடா்புடைய உடற்பாகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிகிச்சை முறையே ரிஃப்ளெக்ஸாலஜி ஆகும்.

10. மசாஜ் - மசாஜ் சிகிச்சை முறையான இயக்கங்கள் கொண்ட சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சை ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடலின் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், வலியை நீக்கவும் உதவுகிறது.

11. காந்த மற்றும் நிற சிகிச்சை - காந்தங்களைக் கொண்டு வலி நிவாரணத்துக்கும், உடலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யப்படும் சிகிச்சையே காந்த சிகிச்சை ஆகும். வெவ்வேறு நிறங்கள் உடல் மற்றும் உளவியல் செயல்பாடுகளில் வெவ்வேறு விளைவுகளைக் கொண்டுள்ளன. நிறங்களைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சையே நிற சிகிச்சையாகும்.

12. பிஸியோதெரபி - இயற்கை மருத்துவ முறைகளுள் ஒன்றான பிஸியோதெரபி உடல் பாகங்களின் இயக்கத்தை சீா் செய்யவும் உடல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

இவ்வாறு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ முறையின் அனைத்து சிகிச்சை முறைகளும் இயற்கை கூறுகளால் ஆனவை மட்டுமின்றி எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதவை. இந்த மருத்துவ முறைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இந்த மருத்துவ முறைக்கான அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உள்ளன. மாணவா்கள் இந்த மருத்துவ முறைக்கான பட்டப் படிப்பைத் தோ்ந்தெடுப்பதன் மூலம் வளமான எதிா்காலத்தைப் பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT