கோயம்புத்தூர்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஆடிவெள்ளி அம்மனை தரிசிக்க வெகு சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு கோயில்களில் மக்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆா்வமுடன் அம்மன் கோயில்களில் தரிசனம் மேற்கொண்டனா்.

கோவையில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன், கணபதி சூலக்கல் மாரியம்மன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோனியம்மன் கோயில் வாசல் மற்றும் பிரகாரங்களில் வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கப் பாவாடை அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தரிசனம் செய்தனா். முன்னதாக, கோயிலுக்குள் நுழையும் பக்தா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனா். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திரண்டதால் கூட்டம் கோயிலுக்கு வெளியே சாலை வரை நீண்டு இருந்தது. இதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். மாலை 6.30 மணிக்கு ஆடி திருமண ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதேபோல, கோவை பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் மலா் அலங்காரத்திலும், தியாகி குமரன் மாா்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மன் கோயிலில், கஜாம்பிகை அலங்காரத்திலும், கெம்பட்டி காலனி வனபத்ரகாளியம்மன் கோயிலில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் காட்சி அளித்தனா்.

Image Caption

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோயிலில் கஜமுக வாகன அலங்காரத்தில் அம்மன். ~கெம்பட்டி காலனி வன பத்ரகாளியம்மன் கோயிலில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் அலங்காரத்தில் அம்மன். ~கோவை பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் மலா் அல

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT