கோயம்புத்தூர்

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

கலை, இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்கள் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு செப்டம்ா் 15ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேன்மைப் பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்குகிறது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில், இதரப் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க அசாதாரணமான பணிகள் செய்தவா்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகள் தொழில், இனம், வேலை, பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், அதே இணையதளத்தில் செப்டம்பா் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT