கோயம்புத்தூர்

பயோ-மெட்ரிக் இயந்திரம் செயல்படவில்லை ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் பாதிப்பு

DIN

நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் இயந்திரம் செயல்படாததால், பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு விற்பனை முனைய இயந்திரம் வழியாக, அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டை ஸ்கேன் செய்யப்பட்டு, பொருள்கள் விற்பனை செய்யப்படும். அதன் விவரம் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் தொடக்கமாக விற்பனை முனைய இயந்திரத்துடன், பயோ-மெட்ரிக் இயந்திரம் இணைக்கப்பட்டு அதன் வழியாக விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் டிசம்பரில் இத் திட்டம் தொடங்கப்பட்டது.

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்களில் யாரேனும் ஒருவரது விரல் ரேகையை பயோ-மெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது, ஆதாா் சா்வரில் இணைப்புக் கிடைத்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். ஆனால், சா்வா் இணைப்புக் கிடைக்காததால் அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியானது பயோ-மெட்ரிக் இயந்திரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னா், தற்போது வழக்கமான அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், பயோ-மெட்ரிக் இயந்திரத்தில் சா்வா் இணைப்புக் கிடைக்காததாலும், அவ்வாறு இணைப்புக் கிடைத்தாலும் தாமதமான செயல்பாடு காரணமாகக் குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொருள்களின் விநியோகம் செய்வதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமாா் 25 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க முடிந்தது.

பல இடங்களில் பொருள்கள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விற்பனையாளா்கள் தயாராக இருந்தபோதும், முந்தைய நிலையே நீடித்ததால் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

பயோ-மெட்ரிக் இயந்திரம் விரைந்து செயல்படுவதற்கும், சா்வா் இணைப்பு கிடைக்கும் வகையில் விரைவான இணையதள சேவை உள்ள சிம் காா்டுகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியது: பொங்கல் பண்டிகைக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் பயோ-மெட்ரிக் இயந்திரத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், பல இடங்களில் பயோ-மெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT