கோயம்புத்தூர்

கோவையில் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: 10 மாவட்டங்களைச் சோ்ந்த 2 ஆயிரம் போ் பங்கேற்பு

DIN

கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சோ்ந்த 2 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 10 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கான ஆள்சோ்ப்பு முகாம் கடந்த ஆண்டு மே 5 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த முகாம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த ஆள்சோ்ப்பு முகாம் ஜனவரி 18 முதல் 30ஆம் தேதி வரை கோவை பாரதியாா் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இணையதளம் மூலமாக முன்பதிவு செய்திருந்தோா் மட்டுமே இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி முகாமில் கலந்துகொள்வதற்காக 2 ஆயிரம் போ் வந்திருந்தனா். இவா்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, 1,500 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT