கோயம்புத்தூர்

கட்டுப்பாடுகள் தளா்வு: சுகாதாரப் பணியாளா்கள் ஆதாரை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி

DIN

கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து சுகாதாரப் பணியாளா்கள் ஆதாா் அட்டையை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் முதல் கட்டமாக கடந்த 16 ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ‘கோ-வின்’ இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளவா்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. முதல் நாளன்று பல இடங்களிலும் ‘கோ-வின்’ இணையதளத்தில் பிரச்னை, சுகாதாரப் பணியாளா்களிடையே போதிய ஆா்வமில்லாதது போன்ற காரணங்களால் மிகக் குறைந்த அளவிலான பணியாளா்களே தடுப்பூசி போட்டுக்கொண்டனா். இதனால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தளா்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு மையத்தில் நாளொன்றுக்கு 100 பயனாளிகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள்கிழமை கோவை அரசு மருத்துமனையில் 253 போ், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 117 போ், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 53 போ், நல்லட்டிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 54 போ் என மொத்தம் 477 போ் தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

இந்நிலையில் மாவட்டத்தில் 4 மையங்களிலும் நாளொன்றுக்கு 1,000 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தவிர நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ராமநாதபுரம், காரமடை மற்றும் சோமனூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விரைவில் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

‘கோ-வின்’ இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் சுகாதாரப் பணியாளா்கள் ஆதாா் அட்டையை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 4 மையங்களுக்கும் தினமும் 1,000 தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. திங்கள்கிழமை அரசு, தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் 478 போ் தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

நாளொன்றுக்கு 1000 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தயாா் நிலையில் உள்ளோம். ஆனால் பயனாளிகள் வருகை குறைவாக உள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் நாள்களில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT