கோயம்புத்தூர்

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் 

4th Jan 2021 02:56 PM

ADVERTISEMENT

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. உணவுப்பொருட்கள், சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 
இந்த கிடங்கில் அடிப்படை உரிமைகள் கேட்கும் தொழிலாளர்கள் திருட்டு பழி சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் இதனை கண்டித்து கடந்த சில தினங்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நல ஆணையர் பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தியபடி 61 நிரந்தர தொழிலாளர்கள், 68 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காமல் மறுக்கப்பட்டு வந்துள்ளது. 
இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி இந்த தொழிற்சாலையின் எதிரில் சிஐடியு சங்கத்தினருடன் இணைந்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
 

Tags : coimbatore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT