கோயம்புத்தூர்

ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என அவரது அண்ணனே கூறியுள்ளார்: அமைச்சர் எஸ்பி வேலுமணி

4th Jan 2021 12:22 PM

ADVERTISEMENT

ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என மு.க.அழகிரி கூறியுள்ளதாக அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து பேசுகையில், கோவை மாவட்டத்தில் 10,11,845 குடும்பத்திற்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது எனவும் கரொனா காலத்தில் மக்கள் நெருக்கடியில் இருப்பதால் தமிழக முதல்வர் 2,500 ரூபாயாக தொகையை உயர்த்தி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

பொங்கல் தொகுப்பில் முதலில் கரும்பு துண்டு கொடுக்கப்பட்டது. இப்போது முழுகரும்பு கொடுக்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் உள்ள 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகின்றது என்றார். ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது 100 ரூபாய் கொடுத்து இந்த பரிசு தொகுப்புக திட்டத்தை துவக்கி வைத்ததாக குறிப்பிட்ட அவர் மக்களுடன் இருந்து முதல்வரானவர் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிமையாக இருக்கின்றார் என புகழாரம் சூட்டினார். 

2,500 ரூபாய் மக்களுக்கு வழங்குவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரு கும்பல் இருக்கின்றது எனவும் எந்த தடைகள் வந்தாலும் 2,500 ரூபாய் மக்களுக்கு சென்று சேரும் எனவும் அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு 269.83 கோடி ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என அவரது அண்ணன் முக அழகிரி தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.

ADVERTISEMENT

Tags : SP Velumani
ADVERTISEMENT
ADVERTISEMENT