தனது கணவர் மணிகண்டன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருக்கு காமராஜர் சாலை பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. அங்கு கடையும் வைத்து உள்ளார். சொந்தமாக ஆட்டோ வைத்து வாடைக்கு ஓட்டி வருகிறார்.
இந்து முன்னேற்ற கழக அமைப்பின் மாநில அமைப்பாளர் மணிகண்டன் என்பவர் தன்னை மிரட்டி பணம் பரிப்பதாகவும் தன்னுடைய இடத்தை புறம்போக்கு நிலம் என்று பொய்யான புகார்களை மாநகராட்சி மற்றும் அரசிடம் தெரிவிப்பதாகவும் கூறி கடந்த 25 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.
இந்தநிலையில் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் மணிகண்டன் மீதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மணிகண்டனின் மனைவி லோக நாயகி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது கணவர் மணிகண்டன் மீது போடப்பட்டு உள்ள வழக்கு பொய் வழக்கு எனப் புகார் அளிக்க வந்தார்.
அப்போது மறைத்து வைத்து இருந்த டீசலை ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி லோக நாயகியை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.