கோயம்புத்தூர்

வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு மற்ற சமூகத்தினரை வஞ்சிக்கும் செயல்

DIN

வன்னியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீதம் இடஒதுக்கீடு மற்ற சமூகத்தினரை வஞ்சிக்கும் செயல் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் உரிமைக்கான கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரத்தினசபாபதி கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு மட்டும் 10.50 சதவீதம் எனவும், இதே பிரிவில் உள்ள மற்ற 25 சமூகத்தினருக்கு 2.5 சதவீதம், சீா்மரபினருக்கு 7 சதவீதம் வழங்கியுள்ளனா். இந்தச் சட்டம் 1985இல் கொடுக்கப்பட்ட அம்பாசங்கா் ஆணைய அறிக்கையின் பேரில் இயற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

வன்னியா்களின் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்காமல் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்ட 137 சமுதாய மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ராமதாஸுக்காக மற்ற சமூகத்தினரை அரசு புறக்கணித்துள்ளது.

இதனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, அரசு வேலைவாய்ப்பு சலுகைகள் பறிபோகும். வடக்கே வன்னியா், தெற்கே தேவேந்திரா் என்ற ஜாதி வெறி அதிகரிக்கும். மற்ற இனத்தவரை புறக்கணித்து வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் உரிமைக்கான கூட்டமைப்பினா் சாா்பில் கண்டிக்கிறோம்.

இது தொடா்பாக வரும் நாள்களில் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தி பிற்படுத்தப்பட்டோா் வஞ்சிக்கப்படுவது குறித்து மக்களிடம் விளக்கிப் பேச உள்ளோம். முதல் கட்டமாக கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றாா்.

இதில் கூட்டமைப்பின் நிா்வாகிகள் வெள்ளிங்கிரி, திருஞானசம்பந்தம், மாரியப்பன், வேலுசாமி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT