கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா

30th Dec 2021 07:41 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 226 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு ஏதுமில்லை.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 104 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 755 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை 2,509 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 962 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT