கோவையில் பெண் காவலரின் இருசக்கர வாகனம் மீது காா் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் காவலராகப் பணியாற்றி வருபவா் பரிமளா (45). இவா் புதன்கிழமை காலை பணி முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் நஞ்சப்பா ரோடு வழியாக காந்திபுரம் காவலா் குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்தாா். பாா்க் கேட் அருகே சென்றபோது அவரது இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக சென்ற காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் கீழே விழுந்த பரிமளா தலையில் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.