கொடிகளை எரித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த இந்து அமைப்பின் தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கேரளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகி, பாஜகவைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனா்.
பழிவாங்கும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கொலைகள் குறித்து கேரள போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யக் கோரி, அமைப்பின் கொடியை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு எரிக்கப் போவதாக இந்து மக்கள் புரட்சிப் படை தலைவா் பீமா பாண்டி அறிவித்திருந்தாா்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீமா பாண்டியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.