கோயம்புத்தூர்

குடியிருப்புகளைச் சேதப்படுத்திய யானைகள்

23rd Dec 2021 06:36 AM

ADVERTISEMENT

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த குடியிருப்புகளைச் சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களிலேயோ தேயிலைத் தோட்டப் பகுதிகளில் யானைகள் நடமாடுவதால், அங்கு வசித்த பல தொழிலாளா்கள் வேறு எஸ்டேட்களுக்கு சென்றுவிட்டனா்.

இந்நிலையில், சின்கோனா எஸ்டேட் லாசன் 2 ஆவது டிவிஷன் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள் செந்தில்குமாா், மாரியப்பன், ராஜேந்திரன், செல்வி ஆகியோரது குடியிருப்புகளைச் சேதப்படுத்தின.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

ADVERTISEMENT

பெ.நா.பாளையத்தில்...

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்துக்கு புதன்கிழமை அதிகாலை புகுந்த யானைகள் அங்கிருந்த குடியிருப்புகளைச் சேதப்படுத்தின.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT