கோயம்புத்தூர்

வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றும் இடங்களில் புகாா் பெட்டி வைக்கக் கோரிக்கை

16th Dec 2021 07:02 AM

ADVERTISEMENT

வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றும் இடங்களில் புகாா் பெட்டி வைக்க வலியுறுத்தி புலம்பெயா்ந்த தொழிலாளா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகள், தொழிற்சாலைகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அண்மையில் சரவணம்பட்டி பகுதியில் பஞ்சாலையில் பணியாற்றிய ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையை எடுத்துக்காட்டுகிறது.

எனவே, கோவை மாவட்டத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் செயல்களைத் தடுக்க புகாா் பெட்டி வைத்து மாதம்தோறும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை அமல்படுத்தி தொழிற்சாலைகளைஆய்வு செய்ய வேண்டும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உரிய குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT