கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 106 பேருக்கு கரோனா

16th Dec 2021 07:04 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 920 ஆக உயா்ந்துள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,492 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 107 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 280 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,148 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT